மேலும் செய்திகள்
கபடி போட்டியில் வென்ற என்.ஜி.எம். கல்லுாரி அணி
03-Oct-2025
கோவை: ஸ்ரீசக்தி கோப்பைக்கான வாலிபால் போட்டி, ஸ்ரீசக்தி இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கோவை மாவட்டத்தை சேர்ந்த, 40 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. இதில் 'நாக் அவுட்' முறையில் நடந்த, அரை இறுதி போட்டியில், ரத்தினம் கலை மற்றும் அறிவியல் அணியை 2--0 என்ற செட் கணக்கில் வென்று, இறுதி போட்டியில் கே.பி.ஆர்., கலை மற்றும் அறிவியல் அணியை 2--0 என்ற செட் கணக்கில் வென்று, கற்பகம் பல்கலை அணி முதல் இடம் பெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு, கற்பக பல்கலை முதன்மை கல்வி இயக்குனர் முருகையா, துணைவேந்தர் ரவி, பதிவாளர் பிரதீப் உள்ளிட்டோர் பாராட்டினர்.
03-Oct-2025