உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோவில்களில் கார்த்திகை தீப வழிபாடு

 கோவில்களில் கார்த்திகை தீப வழிபாடு

- நிருபர் குழு -: கோவில்களில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கார்த்திகை தீபத்திருநாளான நேற்று வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 7:00 மணிக்கு அபிேஷம், 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து, விழாவில் கோவில் வளாகத்தில் மாலை, 7:00 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் நேற்று மாலை, 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட்களில் வீடுகளில் மக்கள் கார்த்திகை தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர். * கிணத்துக்கடவு, பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்தையொட்டி நேற்று, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ராஜ அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தை சுற்றி சுவாமி உலா நடந்தது. அதன்பின் ஜோதி ஏற்றப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கிணத்துக்கடவு சிவலோக நாயகி உடனமர் சிவலோகநாதர் ஆலயத்தில், ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. எஸ்.எம்.பி., நகர் சோற்றுத்துறை நாகர்கோவில், பக்தர்கள் விளக்குகள் ஏற்றி சுவாமியை வழிபட்டனர். * உடுமலை திருமூர்த்திமலையில், திருக்கார்த்திகை விழா நேற்று நடந்தது. தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள பாலசுப்ரமணிருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. வள்ளி, தெய்வானை சமேத சுப்மணியர், திருவீதி உலா வந்து தீப கம்பத்தின் முன் எழுந்தருளினார். தீ கம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதே போல், உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் திருக்கார்த்திகை விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை