உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கதிர் இன்ஜி. கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு

கதிர் இன்ஜி. கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு

கோவை; நீலாம்பூரில் உள்ள கதிர் இன்ஜினியரிங் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கதிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கதிர் தலைமை வகித்தார். கோவை ரூட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கவிதாசன் கூறுகையில், ''இலக்கை அடைய தன்னம்பிக்கையும், திறமையும் அவசியம். ஒழுக்கத்தை மேம்படுத்தி உழைப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தினால் நிலையான வெற்றியை பெறலாம். இளம் வயதிலேயே ஒழுக்கம், சீரான நெறிகளை பின்பற்றினால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்,'' என்றார். நிகழ்ச்சியில், கதிர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் லவாண்யா, இயக்குனர் மிலேஷ், இணை செயலர் விது பிரதிக்சா, மனித வள மேம்பாட்டு துறை தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ