உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்தியாவை வல்லரசாக்குவதில் பொறியாளர்களுக்கு முக்கிய பங்கு

இந்தியாவை வல்லரசாக்குவதில் பொறியாளர்களுக்கு முக்கிய பங்கு

கோவை: சத்தியமங்கலம், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரியின், 24வது பட்டமளிப்பு விழா நடந்தது.விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற, 'ஜோஹோ' நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, சங்கரா கண் மருத்துவமனையின் நிறுவனர் ரமணி, சுந்தர் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் சுந்தரம், பிரிக்கால் நிறுவனர் விஜய் மோகன் ஆகியோர், ஆயிரத்து 517 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கவுரவித்தனர்.விழாவில், 'ஜோஹோ' நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு பேசுகையில், ''வளர்ந்த நாடுகளை காட்டிலும், இந்தியா அதிக மக்கள் தொகையையும், பொறியாளர்களையும் கொண்டுள்ளது.''இந்தியாவை வல்லரசு நாடாக்கும் கனவை, நனவாக்குவதில் பொறியாளர்கள் பங்கு முக்கியமானது,'' என்றார்.கல்லுாரி தலைவர் பாலசுப்ரமணியம், அறங்காவலர் விஜயகுமார், முதல்வர், டீன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை