கே.எம்.சி.ஹெச். சிட்டி சென்டர் ஆண்டு விழா கொண்டாட்டம்
கோவை; கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை ராம்நகர் சிட்டி சென்டர் மருத்துவமனையின், 33வது ஆண்டு மற்றும் சீனியர் சிட்டிசன் ஹெல்த் கிளப் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. சீனியர் சிட்டிசன் ஹெல்த் கிளப்பில், 60 முதல் 90 வயது வரை உள்ள, 400க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் வருடம் ஒரு முறை ஆண்டு விழாவில் சந்தித்துக் கொள்வர். இக்கிளப் உறுப்பினர்களுக்கு, மாதம் ஒரு முறை கே.எம்.சி.ஹெச். சிட்டி சென்டரில் மருத்துவ ஆலோசனை இலவசம். கே.எம்.சி.ஹெச். பிரதான மையத்தில், உலக தரமான மருத்துவ சேவையை சலுகை கட்டணத்தில் பெறலாம் என, சீனியர் சிட்டிசன் ஹெல்த் கிளப் ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன் தெரிவித்தார். விழாவுக்கு, கே.எம்.சி.ஹெச். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா பழனிசாமி தலைமை வகித்தார். ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் கவிதாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கே.எம்.சி.ஹெச். பாலியேடிவ் கேர் ஆலோசகர் டாக்டர் ஹர்ஷாசிங், 'கிரிட்டிக்கல் லைப் கேர்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.