உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கே.எம்.சி.எச்.,ல் சலுகை கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை முகாம்

கே.எம்.சி.எச்.,ல் சலுகை கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை முகாம்

'கே.எம்.சி.எச்.,ல் நடக்கும் முழு உடல் பரிசோதனை முகாமில், பரிசோதனை செய்ய, இரண்டு நபர்கள் சேர்ந்து வந்தால், அவர்களுக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்,' என, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை முழு உடல் பரிசோதனை மைய மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஜோசப் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தற்போதைய சூழ்நிலையில் பலர், தாங்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் தங்கள் உடல் நலனில் கவனம் செலுத்துவதில்லை. ஏதாவது நோயின் அறிகுறி வெளிப்படும்போதோ அல்லது அது தங்கள் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும்போதோ தான் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு முன்வருகின்றனர்.ஆனால், சில நோய்களை பரிசோதனை வாயிலாக முன்கூட்டியே கண்டறிந்தால், தேவையான சிகிச்சை அல்லது உடல் நலன் பாதுகாப்பு குறித்த மருத்துவ ஆலோசனையை பெற்று நோய் பாதிப்பை தவிர்க்கலாம்.எந்த ஒரு நோயையும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால், முழுமையாக நிவாரணம் பெறலாம். உடல் வலி மற்றும் அறுவை சிகிச்சை போன்றவற்றையும் தவிர்க்கலாம். இதற்கு முழு உடல் பரிசோதனை பெரிதும் உதவுகிறது.பல்வேறு நோய் அறிகுறி உள்ளோர், நோய் உள்ளதா இல்லையா என்பதை கண்டறிய விரும்புவோர், புகை, மது பழக்கம் உள்ளோர், சர்க்கரை ரத்த அழுத்த பாதிப்பு உள்ளோர் முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இப்பரிசோதனையை மேற்கொள்வது முக்கியம். இதன் வாயிலாக துவக்க நிலை மற்றும் முற்றிய நிலையில் உள்ள நோய்களை கண்டறிய முடியும். உடலில் பொதுவாக ரத்தம், சிறுநீர், மலம், மார்பக எஸ்க்ரே, காது, மூக்கு, தொண்டை, பல், கண், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், இ.சி.ஜி., டி.எம்.டி., எக்கோ கார்டியோகிராம், மேமோகிராம், ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் உள்ளன; பாதிப்பின் அறிகுறிகளுக்கேற்ப பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.கே.எம்.சி.எச்.,ல், மே 2 துவங்கி, வரும் 31ம் தேதி வரை முழு உடல் பரிசோதனை முகாமுக்கு, இரண்டு பேராக சேர்ந்து வரும் 35 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனை கட்டணத்தில் 20 சதவீத சலுகை வழங்கப்படுகிறது.முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு, 87548 87568 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ