மாணவர்களுக்கு கொங்கு நண்பர்கள் சங்கம் கவுரவம்
கோவை; கோவை கொங்கு நண்பர்கள் சங்கத்தின் சார்பில், 2024---25 கல்வியாண்டில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, பாராட்டு விழா நடந்தது. கோவை கொங்கு நண்பர்கள் சங்கத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். கல்வியாளர் கிருஷ்ணராஜ் வாணவராயர், மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கல்வி ஊக்கத்தொகை, பரிசுகள் வழங்கினார். கே.எம்.சி.எச்., துணைத் தலைவர் டாக்டர் தவமணி, ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு, இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் செயலாளர் சரஸ்வதி, நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன், செயலாளர் சுப்ரமணியன், திருப்பூர் டாலர் குரூப் இயக்குனர் மதுமிதா ஆகியோர் விருந்தினர்களாக பங்கேற்றனர். மாணவர்களுக்கு ரூ.12 லட்சம் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் ஒன்பது பேருக்கு, ரூ.ஒரு லட்சம் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. கொங்கு நண்பர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் நந்தகுமார், துணைத் தலைவர் சண்முகசுந்தரம், இணைச் செயலாளர்கள் லோகநாதன், பாண்டியன், குமார் பங்கேற்றனர்.