கிட்டு டிராபி வென்றது; கே.பி.எம்., பள்ளி அணி
கோவை: கோவை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு இடையேயான 'கிட்டு டிராபி' கால்பந்து போட்டி, ரத்தினம் கல்லுாரி மைதானத்தில் மூன்று நாட்கள் நடந்தது. 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான இப்போட்டியில், 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. பரபரப்பான இறுதிப்போட்டியில், கே.பி.எம்., பள்ளி அணியும், பயனீர் பள்ளி அணியும் மோதின. இதில், 2-1 என்ற கோல் கணக்கில், கே.பி.எம்., பள்ளி அணி வெற்றி பெற்றது. இரண்டாம் இடத்தை பயனீர் பள்ளியும், காரமடை எஸ்.வி.ஜி.வி., பள்ளி மூன்றாம் இடத்தையும், ராகவேந்திரா பள்ளி அணி நான்காம் இடத்தையும் வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, ஜகோபி கார்பன் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா உரிமையாளர் ஆன்டனி தாமஸ், மாவட்ட கால்பந்து சங்க தலைவர் மதன் செந்தில், உதவி தலைவர் ராஜா, செயலாளர் அனில் குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.