கிரிஷ் அதலெடிக்-25 பிப்., 5க்குள் முன்பதிவு
கோவை,; ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வி துறை சார்பில், மாவட்ட அளவிலான 'கிரிஷ் அதலெடிக்-25' போட்டி பிப்., 7ல் நடக்கிறது. இதில், 14, 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்களுக்கு, 100 மீ., 200 மீ., 400 மீ., 600 மீ., நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீ., தொடர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன. தடகள வீரர்கள் ஏதேனும் இரு போட்டிகளில் பங்கேற்கலாம். இதில், முதல் மூன்று இடங்கள் வெல்வோருக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெறுபவர்களுக்கும் பரிசுகள் காத்திருக்கின்றன. வீரர், வீராங்கனைகளுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.பங்கேற்க விரும்புவோர் பிப்., 5ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். விபரங்களுக்கு, 99444 04494, 96290 56666 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.