உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிருஷ்ணர் ஜெயந்தி விழா

கிருஷ்ணர் ஜெயந்தி விழா

* பன்னீர்மடையில் இயங்கும் அக்சயா அகாடமி சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியில், கிருஷ்ணர் ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள், கிருஷ்ணர், ராதை வேடங்களில் அழகாய் வேடமணிந்து வந்திருந்தனர்.பாட்டு, நடனம் போன்ற கலைநிகழ்வுகள் மற்றும் கிருஷ்ண பகவான் குறித்த சொற்பொழிவு நடந்தது. கிருஷ்ணர் அவதரிக்கும் நிகழ்வை மாணவர்கள் நாடகமாய் நிகழ்த்திக் காட்டினர். மேலும், உறியடி, கயிறு இழுத்தல், புதையல் வேட்டை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. பள்ளியின் நிறுவனர் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், பள்ளியின் செயலாளர் பட்டாபிராம், பள்ளியின் முதல்வர் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.* ஸ்ரீ விநாயகா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் சோமசுந்தரம் விழாவிற்கு தலைமை வகித்தார்.துவக்கப் பள்ளி மாணவர்கள் கிருஷ்ணர், ராதைப் போன்று வேடமணிந்து விழாவில் பங்கேற்றனர். கிருஷ்ண ஜெயந்தி கலை நிகழ்வுகளை மாணவர்கள் அரங்கேற்றினர்.பள்ளி நிர்வாக அலுவலர் நிர்மலாதேவி, பள்ளி முதல்வர் சர்லின் மற்றும் ஆசிரியர்கள், விழாவில் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை