ஆசிரியர் சங்க நிர்வாகிக்கு பாராட்டு
கோவை: தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின், மாநிலத் துணைத்தலைவர் அருளானந்தத்தின் ஆசிரியர் இயக்கப்பணியை பாராட்டி, கோயம்புத்துார் தமிழ்ச் சங்கம் சார்பில், 'இயக்கப்பணி நாயகன் விருது' வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்றுள்ள அருளானந்தத்துக்கு, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோவை மாவட்டக் கிளை சார்பில், நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.