மேலும் செய்திகள்
முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்
22-Nov-2024
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே உள்ள பெரிய வடவள்ளியில் உள்ள புஜ்ஜிங்கம்மன் கோவிலில், நேற்று முன் தினம் அதிகாலை நான்காம் கால யாகம், சர்வ காயத்ரி ஹோமம், நாடி சந்தானம், யாத்ரா தானம் நடந்தது.பின்னர் வேத மந்தரங்கள் முழங்க, விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை சிவஸ்ரீ சிவகார்த்திகேயன் ஆச்சாரியார்,சிவ ஸ்ரீ சுகவனேஸ்வான் சிவம் ஆகியோர் தலைமையில் விமான கலகசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.
22-Nov-2024