உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

அன்னுார்; பழமையான மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. அன்னுார், ஓதிமலை சாலையில், லக்கேபாளையம் கோவில் பாளையத்தில், 300 ஆண்டுகள் பழமையான ஈஞ்சங்குலத்தாருக்கு சொந்தமான மதுர காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக கருவறை, விமானம், மகா மண்டபம், வசந்த மண்டபம், தீப கம்பம் அமைக்கப்பட்டுள்ளன. கருப்பராயர், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழா கடந்த 31ம் தேதி தீர்த்த குட ஊர்வலத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் திருவாயில், தீப கம்பம், மணி மண்டபம், ஊஞ்சல் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 9:45 மணிக்கு வேள்விச்சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய குடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. மதுர காளியம்மனுக்கும், விமானங்களுக்கும், விநாயகர் மற்றும் கருப்பராயனுக்கும் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சிரவை ஆதீனம், குமர குருபர அடிகள், சிவானந்த தவக்குடில், சுயம் பிரகாச ஆனந்தசாமி ஆகியோர் அருளுரை வழங்கினர். மதியம் 12:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. வேள்வியை தமிழ் முறைப்படி வாட்போக்கியார், உமையொரு பாகன் வழிபாட்டுக் குழுவினர் செய்தனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி