மேலும் செய்திகள்
ராஜகணபதி கோவிலில் 14ல் கும்பாபிேஷகம்
12-Nov-2024
பொள்ளாச்சி; பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவில்களில் இன்று கும்பாபி ேஷகம் நடக்கிறது.பொள்ளாச்சி, பல்லடம் ரோடு கிருஷ்ணசாமி லே-அவுட் சக்தி விநாயகர் கோவிலில் இன்று கும்பாபிேஷகம் நடக்கிறது. விழாவையொட்டி நேற்று காலை, 8:30 மணிக்கு அனுக்ஞை, விநாயகர் பூஜை, புண்யாகம், பஞ்சகவ்யம், மஹா கணபதி ேஹாமம், மஹாலட்சுமி ேஹாமம், நவக்கிரக ேஹாமங்கள் நடைபெற்றன.தொடர்ந்து, சிறப்பு பூஜைகள், முதற்கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.இன்று காலை, 4:30 மணிக்கு இரண்டாம் கால யாகம், காலை, 6:15 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு, காலை, 6:30 மணிக்கு சக்தி விநாயகர் விமான கோபுர கும்பாபிேஷகம், அதன்பின், சக்தி விநாயகர் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகள் மூலாலய மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து மஹா அபிேஷகம், அன்னதானம் நடைபெறுகிறது.*ஆனைமலை திவான்சாபுதுார் நாடுகாணி நகரில் உள்ள லட்சுமி விநாயகர், செந்துார் முருகன், ஆதிசக்தி நாடுகாணி அம்மன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா இன்று நடக்கிறது. விழாவையொட்டி, கடந்த, 26ம் தேதி திருவிளக்கு வழிபாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. மூன்று கால வேள்வி பூஜைகள் நடைபெற்றன.இன்று அதிகாலை, 4:00 மணிக்கு திருபள்ளியெழுச்சி, மங்கள இசை, ஆட்டிகாப்பு அணிவித்தல் நடக்கிறது. காலை, 4:30 மணிக்கு நான்காம் கால வேள்வி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. காலை, 6:15 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா, காலை, 6:45 மணிக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு தச தரிசனம், அன்னதானம் நடக்கிறது.
12-Nov-2024