மேலும் செய்திகள்
ஆட்சீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் விமரிசை
02-Jul-2025
போத்தனூர்; கோவை, மதுக்கரையில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள, தர்மலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், இன்று நடக்கிறது. மதுக்கரை மரப்பாலம் அருகே அமைந்துள்ள இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று திரளான பக்தர்கள் கிரிவலம் செல்வர். இக்கோவிலில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி, நினைவுத் திருமஞ்சனம், எண் வகை மருந்து சாற்றுதல், இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்வி, பேரொளி வழிபாடு, திருமுறை, நாட்டிய விண்ணப்பம் உள்ளிட்டவை நடந்தன. இன்று காலை திருப்பள்ளி எழுச்சி, மூல மூர்த்திகளுக்கு ஆனைந்தாட்டல், காப்பணிவித்தல், நான்காம் கால வேள்வி, திருக்குடங்கள் புறப்பாடு உள்ளிட்டவை நடக்கின்றன.தொடர்ந்து காலை, 8:30 முதல் 9:00 மணிக்குள் ராஜகோபுரம், விமானங்கள், பரிவாரங்கள், மூல மூர்த்திகள் ஆகியவற்றுக்கு, கும்பாபிஷேகம் நடக்கிறது.இதையடுத்து பதின் மங்கல காட்சி, பெருந்திருமஞ்சனம், பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் உள்ளிட்டவை நடக்கின்றன. பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் சந்தியா, தக்கார் நாகராஜன் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.
02-Jul-2025