உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆதிகணபதி கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

ஆதிகணபதி கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

வால்பாறை; வால்பாறை அடுத்துள்ள உருளிக்கல் ஆதிகணபதி கோவிலில், மஹா கும்பாபிேஷக விழா இன்று, மாலை 5:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கிராம சாந்தி, மிருத்சங்கிரணத்துடன் துவங்குகிறது.இரவு, 7:00 மணிக்கு முதல் கால யாக வேள்வி, கணபதி ேஹாமம், ஸ்ரீருத்ர ேஹாமம், பூர்ணாஹுதி நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு ஸ்வர்ணயந்திர, ரத்தின ஸ்தாபம், சுவாமி பிரதிஷ்டை நடக்கிறது. நாளை, (1ம் தேதி) காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, மூலமந்திர ேஹாமம், தீபாராதனையும் நடக்கிறது.காலை, 10:30 மணிக்கு விமான கலசத்துக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.தொடர்ந்து, கணபதிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ