உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாதேஸ்வர சாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

மாதேஸ்வர சாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

அன்னுார்; கானுார், மாதேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நாளை (4ம் தேதி) நடக்கிறது. கானுாரில் ஸ்ரீ மாதேஸ்வர ஸ்வாமி விநாயகர், முருகன், கருப்பராயர், கன்னிமார் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன.இதையடுத்து கும்பாபிஷேக விழா நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து நவகிரக ஹோமம், தச தரிசனம், கோபுர கலசங்கள் நிறுவுதல், வாஸ்து சாந்தி, தீபாராதனை நடந்தது.இன்று காலை 9;00 மணிக்கு வேள்வி பூஜை நடக்கிறது. மதியம் விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.நாளை (4ம் தேதி) காலை 9 : 30 மணிக்கு, விமான கோபுரம், பரிவார தெய்வங்கள், மூலவர் ஆகியோருக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதையடுத்து மகா அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது.மூன்று நாட்களும் வேத சிவாகம திருமுறை பாராயணம் நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்று இறையருள் பெற விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை