உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குண்டத்து மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா துவக்கம்

குண்டத்து மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா துவக்கம்

போத்தனூர்; கோவை, குறிச்சி காந்திஜி சாலையிலுள்ள குண்டத்து மாகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா நேற்று காலை, புண்ணிய வாசம், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து குறிச்சி பொங்காளியம்மன் கோவிலிலிருந்து கொடி மரம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோவிலில் கொடியேற்றப்பட்டது. இதையடுத்து, இரவு அரவான் கோவில் முன் அரவானுக்கு ஆடி மாத அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. வரும், 5ம் தேதி காலை, 9:30 முதல் 10:30 மணிக்குள் குண்டம் கட்டுதல், மாலை, 5:00 மணிக்கு அம்மன் அழைப்பு, இரவு, 7:00 மணிக்கு திருக்கல்யாணம் தொடர்ந்து குண்டம் பூ வளர்த்தல் நடக்கின்றன. 6ம் தேதி காலை, 6:30 மணிக்கு பொங்காளியம்மன் கோவிலிலிருந்து கரகங்கள் புறப்படுதல், 8:30 மணிக்கு முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல், அக்னி அபிஷேகமும் மாலை 4:00 மணிக்கு மாவிளக்கு வழிபாடும் நடக்கின்றன. 7ம் தேதி காலை, 9:30 மணிக்கு கொ டி இறக்குதல், மாலை, 3:00 மணிக்கு மஞ்சள் நீராடல், 6:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா, இரவு, 8:00 மணிக்கு மகா அபிஷேகம் ஆகியவற்றுடன் விழா நிறைவடைகிறது. விழா முன்னிட்டு, தினமும் ஒவ்வொரு சமூகத்தாரின் பூஜை நடத்தப்படுகிறது. ஏற்பாடுகளை, அனைத்து சமூக ஒருங்கிணைந்த பெரிய தனக்காரர்கள் கூட்டமைப்பினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி