ரேஷன் அரிசி கடத்திய இருவர் மீது குண்டாஸ்
கோவை : ரேஷன் அரிசி கடத்திய இருவர் மீது, குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் கடந்த கடந்த ஆக.,20ம் தேதி காரமடைசின்னதொட்டிபாளையம், காந்திநகர் பகுதியில் உள்ள பாய் குடோனில் 5.5 டன் பொது விநியோகத் திட்டம் ரேஷன் அரிசியை கடத்தி, பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அரிசியை பறிமுதல் செய்து, பதுக்கி வைத்திருந்த வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த முருகலிங்கம், 39 மற்றும் மதுக்கரை மார்க்கெட் பகுதி யை சேர்ந்த சுதாகர், 29 ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இருவரும், பொது விநியோகத் திட்ட அரிசியை வண்டிகளில் கடத்திச் சென்று விற்று அதிக லாபம் சம்பாதித்து வந்தனர். இதனால், இருவர் மீதும் கள்ளச்சந்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் பரிந்துரையின் பேரில், கலெக்டர் கிராந்திகுமார் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.