மேலும் செய்திகள்
வழிப்பறி திருடன் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
30-Oct-2024
கோவை: அன்னுார் பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். அன்னுார் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார், 36; இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசுக்கு புகார் வந்தது. புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, விஜயகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து, விஜயகுமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க, கோவை ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில், கலெக்டர் கிராந்தி குமார் பாலியல் குற்றவாளி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.அதன்படி, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
30-Oct-2024