மேலும் செய்திகள்
நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் காலமானார்
16-Aug-2025
முப்படை மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்
17-Aug-2025
Breaking நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் மரணம்
15-Aug-2025
கோவை; நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் மறைவுக்கு, அஞ்சலி கூட்டம் குஜராத் சமாஜ் அரங்கில் நடந்தது. கோவையில் உள்ள அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில், நடந்த கூட்டத்துக்கு, கோவை மாநகர ஆர்.எஸ்.எஸ்., தலைவர் ராஜா தலைமை வகித்தார். இதில், பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பேசியதாவது: இளம் வயதிலேயே, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர் இல.கணேசன். அரசு பணியில் நல்ல பதவியில் இருந்த போதும், அதை வேண்டாம் என ஒதுக்கிவிட்டு, இந்து இயக்கங்களின் வளர்ச்சிக்காக பணியாற்றியவர். உண்மையான இந்துத்துவ உணர்வுள்ள தொண்டர்களை, இயக்கத்துக்கு அழைத்து வந்தார். ஆர்.எஸ்.எஸ்.,இயக்கத்தை விட்டு, பா.ஜ.,வின் மத்திய, மாநில பொறுப்புக்கு வந்த பிறகு, கட்சியின் வளர்ச்சிக்காக, இயக்க பற்றுள்ள நிர்வாகிகளை உருவாக்கினார். பிரதமர் நரேந்திரமோடி, ஹிந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலன் போன்ற தலைவர்கள் வரிசையில், மக்கள் மனதில் நீங்காத இடத்தை இல.கணேசன் பெற்றுள்ளார். இவ்வாறு, அவர் பேசினார். சேவா பாரதி மாநில கவுரவ தலைவர் ராமநாதன், லகு உத்யோக் பாரதியின் மாநில பொறுப்பாளர் கல்யாணசுந்தரம், கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
16-Aug-2025
17-Aug-2025
15-Aug-2025