உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு

தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு

குடியரசு தினத்தன்று, தொழிலாளர் துறை அதிகாரிகள் திருப்பூர், தாராபுரம், உடுமலை சுற்றுப் பகுதிகளில் 30 கடைகள், 43 உணவு நிறுவனங்கள் உட்பட, 74 இடங்களில் ஆய்வு நடத்தினர்; 26 கடைகள்; 40 உணவு நிறுவனங்கள் என, 66 இடங்களில், விதிமுறைகள் சரிவர பின்பற்றி விடுமுறை அளிக்கப்படாமல் இருந்தது.திருப்பூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) ஜெயக்குமார் கூறுகையில்,''மாவட்டம் முழுவதும், நேற்றுமுன்தினம் ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம், 74 நிறுவனங்களில் ஆய்வு நடத்தியதில், குடியரசு தினவிழா விடுமுறை விதிகளில், 66 முரண்பாடுகள் இருந்தது தெரிய வந்தது; சம்பந்தப்பட்ட வேலை அளிக்கும் நிறுவனங்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார். -- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ