உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு

மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு

அன்னுார்; அன்னுார் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில் திருவிளக்கு வழிபாடு நடந்தது.அன்னுார் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில் கடந்த 6ம் தேதி கம்பம் நடப்பட்டு, பூவோடு எடுக்கப்பட்டது. கடந்த 9ம் தேதி வரை தினமும் மதியம் மாரியம்மனுக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடும் வைபவம் நடந்தது. இரவு திருவிளக்கு வழிபாடு நடந்தது.கடந்த 10ம் தேதி இரவு அச்சம்பாளையம், சண்முகம் குழுவின் பஜனை நடந்தது. விழா கமிட்டியினர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று மதியம் அபிஷேக ஆராதனையும், இரவு 7:00 மணிக்கு அணிக்கூடை எடுத்து வருதலும் நடக்கிறது. நாளை காலை 10:30 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம், மதியம் 12:00 மணிக்கு அபிஷேக பூஜை நடைபெறுகிறது. மாலை 4:30 மணிக்கு, பஜனை, செண்டை மேளம் மற்றும் வானவேடிக்கை உடன் முக்கிய வீதிகளின் வழியாக சுவாமி திருவீதிஉலா நடைபெறுகிறது.வரும் 14ம் தேதி மதியம் அபிஷேக ஆராதனையும், மாலையில் அலகு தரிசனமும், இரவு பக்தி சொற்பொழிவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை