உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராம்நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு

ராம்நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு

கோவை: கோவை ராம்நகர் கோகலே வீதியில் உள்ள, ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா துவங்கியது.கடந்த செவ்வாய்க் கிழமை கணபதி ஹோமம், கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று நடந்த திருவிளக்கு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.இன்று அம்மனுக்கு திருக்கல்யாண வைபவமும், வரும் 14ம் தேதி புதன்கிழமை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அதனையொட்டி, அம்மன் திருவீதி உலா மற்றும் அன்னதானம் தினமும் நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ