உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாராஹி மந்திராலயத்தில் திருவிளக்கு பூஜை

வாராஹி மந்திராலயத்தில் திருவிளக்கு பூஜை

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராஹி மந்திராலயத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. இக்கோவில் வளாகத்தில், 11 அடி உயர ஜெய வீர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சமீபத்தில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, 1008 திருவிளக்கு பூஜை நேற்று மாலை கோவில் வளாகத்தில் நடந்தது. இதில், திரளான பெண்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !