உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மடத்துக்குளத்தில் ரூ 1.50 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

மடத்துக்குளத்தில் ரூ 1.50 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

மடத்துக்குளம்: மடத்துக்குளம், குமரலிங்கம் ரோட்டில், சர்க்கார் கண்ணாடிபுத்துார் கிராமத்தில், சர்வே எண் 438/1, 3 ஏ காலையில், 1.06 ஏக்கர் அரசு புறம் போக்கு நிலம் உள்ளது.இந்த நத்தம் புறம்போக்கு நிலத்தை, அதே பகுதியைச்சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஆக்கிரமித்து, தென்னங்கன்றுகள் வைத்திருந்தார். பல ஆண்டுகளாக அரசு நிலம் ஆக்கிரமிப்பில் இருந்த நிலையில், முறைப்படி ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள அறிவிப்புகள் வழங்கப்பட்டது.இந்நிலையில், மடத்துக்குளம் தாசில்தார் குணசேகரன், துணை தாசில்தார் விஷ்ணு கண்ணன், சர்வேயர்கள் மணிவண்ணன், ராஜ்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அதிரடியாக, அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலத்தை மீட்டனர். அங்கிருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு, அரசுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, ரூ. 1.50 கோடியாகும்; மீட்கப்பட்ட நிலத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ