லேப்டாப் வழங்கும் விழா
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழக அரசின் விலையில்லா லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜெய்சங்கர் தலைமை வகித்தார். தமிழ் துறை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். காரமடை நகராட்சி தலைவர் உஷா, மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்புகளை வழங்கி பேசினார். கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, குரு பிரசாத், ரவிக்குமார், மஞ்சுளாதேவி உட்பட பலர் பேசினர். மாணவ மாணவியர் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பங்கேற்றனர். கல்லூரி நூலகர் ராஜ்குமார் நன்றி கூறினார்.