வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
கோவை; டில்லியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய், நீதிமன்றத்தில் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, வக்கீல் உடையில் வந்த நபர், அவர் மீது காலணியை வீசி தாக்க முயன்றார். இச்சம்பவத்தை கண்டித்து, கோவை ஒருங்கிணந்த நீதிமன்ற வளாகம் முன், வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஜனநாயகத்தின் நான்காம் துாணாக விளங்கும் நீதிமன்றத்தின் மாண்பை பாதுகாக்க வலியுறுத்தியும், நீதிபதி மீது தாக்குதல் நடத்த முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கோஷம் எழுப்பினர்.