வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை: வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வலியுறுத்தி, கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சியில் கார் பார்க் செய்யும் போது, ஏற்பட்ட தகராறில் திருச்சி வழக்கறிஞர் சங்க உறுப்பினர் அழகேஸ்வரன், அவரது தம்பி உமா சங்கர் மீது சிலர் ஆயுதங்களால் தாக்கினர். உமாசங்கர் உயிரிழந்தார். வக்கீல் அழகேஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை கண்டித்து, நேற்று கோவை நீதிமன்ற நுழைவாயிலில், கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை, தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கோவை வக்கீல்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு தலைவர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.