உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீர் உந்து நிலைய குழாயில் கசிவு; சீரமைப்பு பணிகள் தீவிரம்

நீர் உந்து நிலைய குழாயில் கசிவு; சீரமைப்பு பணிகள் தீவிரம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சி நீர் உந்து நிலைய பிரதான குழாயில் ஏற்பட்ட கசிவை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பொள்ளாச்சி நகராட்சிக்கு, அம்பராம்பாளையம் அருகே, ஆழியாறு ஆற்றில் இருந்து நீர் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. நகராட்சி நீரேற்று நிலையத்தில் இருந்து, தினமும், 14 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்படுகிறது. மார்க்கெட் ரோட்டில் உள்ள நீர் உந்து நிலையம் வாயிலாக, 11 மில்லியன் லிட்டர் தினமும் வினியோகிக்கப்படுகிறது. ஒன்பது உயர் மட்ட குடிநீர் தேக்க தொட்டி, இரண்டு தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதில், நேற்று பஸ் ஸ்டாண்ட் அருகே மார்க்கெட் ரோடு நீர் உந்து நிலையத்தில் இருந்து செல்லும் பிரதான குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வெளியேறியது. இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மார்க்கெட் ரோடு நீர் உந்து நிலையத்தில் இருந்து செல்லும் பிரதான குழாய், பஸ் ஸ்டாண்ட் ரோட்டை கடந்து செல்கிறது. இதன் வாயிலாக, மகாலிங்கபுரம், கே.ஆர்.ஜி.பி., நகர், சுதர்சன் நகர் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. பிரதான குழாயில் ஏற்பட்ட கசிவு உடனடியாக சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நீர் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை