உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் கற்றல் சங்கங்கள் மாநாடு

குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் கற்றல் சங்கங்கள் மாநாடு

கோவை; குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில், இன்று துவங்கும் கற்றல் சங்கங்களின் மாநாடு 2025ல், 1,500க்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர்.குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரி உதவி துணைத்தலைவர் சரவணன் மற்றும் சிக்சாந்தர் அந்தோலன் நிறுவனர் மணீஷ் ஜெயின் ஆகியோர் கூறியதாவது:கற்றல் சங்கங்களின் மாநாடு 2025 நாளை(இன்று) துவங்கி, வரும் 22ம் தேதி நிறைவடைகிறது. இம்மாநாடு கடந்த, 2002 முதல் இந்தியாவிலும், பல்வேறு வெளிநாடுகளிலும்நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து, அவர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதிலும் இருந்து, 1500 பேர் பங்கேற்க உள்ளனர்.மாற்றுக் கல்வியாளர்கள், வீட்டில் கல்வி பயில்பவர்கள், பள்ளி செல்லாதவர்கள், கலைஞர்கள், சுற்றுச்சூழல் கட்டட கலைஞர்கள், ஹீலர்கள், இயற்கை விவசாயிகள், தொழில்முனைவோர், ஆன்மிகவாதிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை