உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 2 கேமரா பொருத்தி சிறுத்தை கண்காணிப்பு

2 கேமரா பொருத்தி சிறுத்தை கண்காணிப்பு

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே ஆடுகளை கொன்ற சிறுத்தையை கண்காணிக்க அப்பகுதியில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காரமடை அருகே சுண்டக்கொரையை சேர்ந்தவர் ராமசாமி; விவசாயி. இவர் தனது ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்திருந்த போது, அங்கு வந்த சிறுத்தை ஒரு ஆட்டை கொன்றும், மற்றொரு ஆட்டை கவ்வி கொண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து சிறுத்தையை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக இப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து காரமடை வனத்துறையினர் கூறுகையில், ''கேமராக்கள் வைத்து சிறுத்தையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். சிறுத்தை வரும் வழியில் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை