உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தொழிற்சாலைக்குள் சிறுத்தை உலா; மக்கள் அச்சம்

 தொழிற்சாலைக்குள் சிறுத்தை உலா; மக்கள் அச்சம்

சூலுார்: கோவை சூலுார் அருகே தொழிற்சாலைக்குள் உலா வந்த சிறுத்தையால், சுற்றுவட்டார மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவை சூலுார் ராவத்துார் பிரிவு நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் தொழிற்சாலைக்குள், சில நாட்களுக்கு முன், இரவில், சிறுத்தை ஒன்று புகுந்து உலா வந்துள்ளது. ஏதோ சப்தம் கேட்கிறதே என, இரவு காவலாளி தொழிற்சாலை வளாகத்தை சுற்றி வந்தபோது, மரப்பெட்டிகளுக்கு இடையில் மறைந்து இருந்த, சிறுத்தை பாய்ந்து ஓடியது. இது அங்குள்ள சி.சி.டி.வி., காமிராக்களில் பதிவாகியிருந்தது. அதை பார்த்த பிறகே வந்து சென்றது சிறுத்தை எனத்தெரிந்தது. இதையடுத்து, தகவல் அறிந்த சூலூர் போலீசார் அங்கு சென்று விசாரித்த பின், வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து ராவத்துார் மக்கள் கூறியதாவது: ஊட்டி, வால்பாறை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாடுவது குறித்து கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால், எங்கள் ஊருக்கே சிறுத்தை வரும் என எதிர்பார்க்கவில்லை. அருகில் உள்ள நொய்யல் ஆறு வழியாக வந்திருக்கலாம். இரவு நேரத்தில் பலரும் பணி முடிந்து நொய்யல் ஆற்றை ஒட்டி உள்ள ரோடு வழியாகத்தான் வரவேண்டும். சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்க, வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ