மண் குவளை வைப்போம் குருவிகளின் தாகம் தீர்ப்போம்
கோவை: காலை நம்மை எழுப்பி விடும் குருவிகளின் சப்தம் இனிமை தான். ஆனால், அவற்றுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்தால், வீட்டில் இருந்து கிளம்பும் போதும், அல்லது வீட்டில் இருக்கும் போதும் ஒரு சிறிய குடுவையில் நீர் ஊற்றி, குருவிகளுக்கு வைக்கலாம்.பறவையின் முக்கியத்துவம் குறித்து, வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையினர், கடந்த நான்கு ஆண்டுகளாக பள்ளி, மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பறவைகளின் தாகம் தணிக்க, மண் குவளையை அன்பளிப்பாக அளித்து வருகின்றனர்.நடப்பாண்டு ஐந்தாம் ஆண்டு தொடர்ச்சியாக, இதன் ஒருங்கிணைப்பாளர் சிராஜ்தீன், பெரியகடை வீதி பகுதியில் அமைந்துள்ள, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் படிக்கும், 50 மாணவ, மாணவியருக்கு, மண் குவளை வழங்கினார்.