மேலும் செய்திகள்
தி.மு.க. - அ.தி.மு.க.வில் 'சீட்' யாருக்கு?
16-Dec-2025
கோவை: உலகின் முன்னணி ஏர் கம்ப்ரஸர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட், கோவை மாரத்தான் உடனான தனது 13 ஆண்டு கால உறவை, பெருமையுடன் கொண்டாடுகிறது. கோவை மாரத்தான் நிகழ்ச்சிக்கு, பெரும் நிதி ஆதரவு வழங்கும் 'ஸ்பான்சராக', இந்த நிறுவனம் இருந்து வருகிறது. கோயம்புத்துார் கேன்சர் பவுண்டேஷன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாரத்தான், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவளிக்கவும் ஒரு தளமாக உருவாக்கப்பட்டுள்ளதாக, எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் தலைமை இயக்கக அதிகாரி அன்வர் ஜெய் வரதராஜ் தெரிவித்தார். எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனத்தின் செயல்பாடு பிரிவு நிர்வாக தலைவர் ரமேஷ் பொன்னுசாமி பேசுகையில், ''இம்முறை இந்த நிகழ்வில் பங்கேற்ற 25,000க்கும் அதிகமான பங்கேற்பாளர்களில் 1,725க்கும் மேற்பட்டவர்கள், எல்ஜி ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர். இது, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதிலும், அதற்கான பராமரிப்பு திட்டங்களுக்கு ஆதரவளிப்பதிலும் எங்களுக்கு உள்ள, கூட்டுப் பொறுப்பை பிரதிபலிக்கிறது,'' என்றார்.
16-Dec-2025