உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாலிசிதாரர் பாதுகாவலராக எல்.ஐ.சி., இயங்கி வருகிறது

பாலிசிதாரர் பாதுகாவலராக எல்.ஐ.சி., இயங்கி வருகிறது

கோவை;''பாலிசிதாரர்களின் பாதுகாவலராக எல்.ஐ.சி., இயங்குகிறது,'' என, எல்.ஐ.சி., யின் 68 வது இன்சூரன்ஸ் வாரவிழாவில், முதுநிலை கோட்ட மேலாளர் ராஜேந்திரகுமார் பேசினார்.எல்.ஐ.சி., யின் 68வது இன்சூரன்ஸ் வாரவிழாவை முன்னிட்டு, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை கோட்ட அலுவலகத்தில் துவக்க விழா நடந்தது. முதுநிலை கோட்ட மேலாளர் ராஜேந்திரகுமார், எல்.ஐ.சி., கொடியை ஏற்றி வைத்து பேசுகையில், ''கடந்த 68 ஆண்டுகளாக எல்.ஐ.சி., தொடர்ந்து லாபம் ஈட்டும் நிறுவனமாக, செயல்பட்டு வருகிறது. அதன் பலன்களை, பாலிசிதாரர்களுக்கு போனசாக வழங்குகிறது. பாலிசிதாரர்களின் பாதுகாவலராக நிறுவனம் இயங்குகிறது. 'கோல்டன் ஜூப்ளி பண்ட்' வாயிலாக, ஏழை மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கி வருகிறது,'' என்றார்.ஆக்ஸிஸ் வங்கி மண்டலத் தலைவர் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். கோட்ட வணிக மேலாளர் சந்திரமோகன், கோட்ட வங்கி இன்சூரன்ஸ் மேலாளர் கோவிந்தராஜ், அலுவலக சேவைத் துறை மேலாளர் ஜோசப் வில்லியம்ஸ், எல்.ஐ.சி.,யின் சிறப்புகள் பற்றி பேசினர். மூத்த ஊழியர்கள், வெங்கடேஸ்வரன், சாந்தி, மற்றும் வணிக சாதனையாளர்களான முகவர்கள், ஈஸ்வரமூர்த்தி, வெங்கடாசலம் கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை