உணவு பாதுகாப்பு துறை சார்பில் உரிமம் புதுப்பிப்பு சிறப்பு முகாம்
வால்பாறை : வால்பாறையில், உணவு பாதுகாப்பு தர நிர்ணயத்துறை சார்பில், சிறப்பு முகாம் நடந்தது.வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட உணவு வணிகம் செய்யும் வியாபாரிகளுக்கு, உரிமம் மற்றும் பதிவை புதுப்பிக்க சிறப்பு முகாம் நகராட்சி திருமண மண்டபத்தில் நடந்தது.உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து முகாமை துவக்கி வைத்து பேசும் போது, ''உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம், 2006 விதிகள், 2011ன் படி உணவு பொருட்கள் தயாரிப்பு, மறு பொட்டலமிடுபவர்கள், விநியோகம் மற்றும் விற்பனை செய்யும் உணவு வியாபாரிகள் அனைவரும் உரிமம் பதிவு செய்ய வேண்டும்.உரிமம் இல்லாமல் உணவு வணிகம் செய்பவர்கள் தர சட்டம்,2006 பிரிவு 63ன் கீழ், 6 மாத சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வியாபாரிகள் உடனடியாக உரிமம் பெற வேண்டும்; உரிமம் பெற்றவர்கள் பதிவை புதுப்பிக்க வேண்டும்,'' என்றார்.