மேலும் செய்திகள்
தந்தை கொலை வழக்கில் குடிகார மகனுக்கு 'ஆயுள்'
19-Oct-2024
கோவை: தொழிலாளியை குக்கர் மூடியால் அடித்துக் கொலை செய்தவருக்கு, ஆயுள்சிறை விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.கோவை, ஒண்டிப்புதுார், மாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வந்தவர் சீனிவாசன்,30; கூலித் தொழிலாளி. இவரது நண்பர் கார்த்திகேயன் என்பவர், சீனிவாசன் வீட்டில் தங்கியிருந்து பெயின்டிங் வேலைக்கு சென்றார். அப்போது, சூலுாரை சேர்ந்த சம்பத்குமார்,32, என்பவருடன் கார்த்திகேயனுக்கு நட்பு ஏற்பட்டது. சம்பத்குமாரை, சீனிவாசன் வீட்டிற்கு கார்த்திகேயன் அடிக்கடி அழைத்து வந்துள்ளார். மூவரும் சேர்ந்து மதுகுடிப்பதை, வழக்கமாக கொண்டிருந்தனர்.இந்நிலையில், சம்பத்குமார் தான் வளர்த்து வந்த ஐந்து சேவல்களை, விற்றுத் தருமாறு கார்த்திகேயன், சீனிவாசனிடம் கொடுத்துள்ளார். சேவல் விற்ற பணத்தை வாங்க, 2021, ஜூலை, 16ல், சீனிவாசன் வீட்டிற்கு வந்த போது, மூன்று சேவல்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதை கேட்ட சம்பத்குமார், ''சேவலை விற்று விட்டு, செத்து விட்டதாக பொய் சொல்கிறீர்கள்'' எனக்கூறி தகராறு செய்தார்.ஆத்திரமடைந்த சம்பத்குமார், குக்கர் மூடியால் இருவரது தலையிலும் அடித்தார். இதில், சீனிவாசன் சம்பவ இடத்தில் இறந்தார். படுகாயமடைந்த கார்த்திகேயன், சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்தார்.சிங்காநல்லுார் போலீசார் விசாரித்து, சம்பத்குமாரை கைது செய்து, கோவை குண்டுவெடிப்பு வழக்கு தனிக்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி(பொறுப்பு) விவேகானந்தன், குற்றம் சாட்டப்பட்ட சம்பத்குமாருக்கு, ஆயுள்சிறை, 15,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜரானார்.
19-Oct-2024