மேலும் செய்திகள்
காலை முதல் மாலை வரை சாரல்
31-May-2025
சூலுார்; சூலுார், சுல்தான்பேட்டையில், இரு நாட்களாக, லேசான தூறல் மழை பல பகுதிகளில் பெய்தது.கடந்த இரு நாட்களாக, சூலுார் மற்றும் சுல்தான்பேட்டை வட்டார கிராமங்களில் லேசான தூறல் மழை விட்டு, விட்டு பெய்தது. நேற்று, அரைமணி நேரம் வரை நீடித்த தூறல் ஓய்ந்து, சிறிது இடைவெளிக்கு பின் மீண்டும் தொடர்ந்தது. அரசூரில், நேற்று காலை வரை, இரண்டு மி.மீட்டர் மழையளவும், சுல்தான்பேட்டை பகுதியில், 10 மி.மீட்டர் மழையளவும் பதிவாகி இருந்தது. வானம் மேக மூட்டமாக இருந்தது.
31-May-2025