மழலை செல்வங்களின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது லிஸ்டாஸ் பள்ளிகள்
'ஒவ்வொரு குழந்தைகளின் தனித்திறனை கண்டறிந்து அவர்களுக்கான வாய்ப்பை உருவாக்கித் தருவதே எங்கள் நோக்கம்,' என, லிஸ்டாஸ் மழலையர் பள்ளி நிறுவனர் சோபியா சிவக்குமார் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: பால்ய பருவம் குழந்தைகளின் அறிவுத்திறன், சமூக உணர்வு மற்றும் வாழ்க்கை முழுவதற்குமான அடித்தளத்தை அமைக்கும் பருவமாகும். சிறு வயதில் அவர்கள் பெறும் கல்விதான், அவர்களின் நம்பிக்கை, உணர்ச்சி மற்றும் வாழ்வுத் திறன்களை வளர்க்கும். அதற்கேற்ப எங்கள் பள்ளியில் கல்வி மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்வியுடன் விளையாட்டு, கதை சொல்லல், அறிவியல் ஆராய்ச்சி உள்ளிட்டவற்றிலும் குழந்தைகள் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட வழிகாட்டல் அளிக்கப்படுகிறது. அவர்களின் விருப்பங்கள் மற்றும் வளர்ச்சிக்கு தேவையானதை அறிந்து செயல்பட்டு வருகிறோம். இதனால், குழந்தைகளுக்கு அதிக தன்னம்பிக்கையும், கற்றல் மீதான விருப்பமும் அதிகரிக்கிறது. லிஸ்டாஸ் ஒரு பள்ளி மட்டுமல்ல; ஒரு சமூகத்தை உருவாக்கும் இடம். நாங்கள் இளம் மழலையர் கல்வியை, நடுத்தர மக்களும் பயன்பெறும் வகையில் குறைவான கல்வி கட்டணத்தில் வழங்குகிறோம். கோவையில் 13 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.