உள்ளூர் செய்திகள்

இலக்கிய பெருவிழா

கோவில்பாளையம்: கவையன்புத்துார் தமிழ்ச் சங்கம் மற்றும் பி.பி.ஜி., கலை அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை சார்பில், இலக்கிய பெருவிழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. தமிழ்த்துறை தலைவர் சந்திரகலா வரவேற்றார். கணினி அறிவியல் துறை தலைவர் குமரேசன் தலைமை வகித்து பேசுகையில், ''ஒவ்வொரு மனிதனின் உயிர்நாடி தாய் மொழியே. ஆழ்மன எண்ண பகிர்வுகளுக்கும், சிந்தை தெளிவுக்கும் துணை நிற்பது தாய் மொழியே. சாதனையாளர்கள், படைப்பாளர்கள் பயணிக்க உதவுவது தாய் மொழி தான்,'' என்றார். திவ்யா, அப்பர்சாமி பயணியர் கல்லுாரி முதல்வர் முருகேசன், புலவர் வேலுச்சாமி, முனுசாமி ஆகியோர் பேசினர். பணி நிறைவு தலைமை ஆசிரியர் கந்தசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ