லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் தாமதம்
கோவை: கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தினமும் காலை 8:50க்கு புறப்படும் லோக்மான்ய திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயில்(11014) மறுநாள் மதியம் 1:55க்கு மும்பை லோக்மான்ய திலக் ஸ்டேஷன் அடைகிறது. இந்நிலையில், இணை ரயில் வருகை தாமதம் காரணமாக மே 2 மாலை 5:00க்கு என எட்டு மணி நேரம் தாமதமாக இந்த ரயில் கோவையில் இருந்து புறப்பட்டது. இதனால் பயணிகள் சிரமங்களுக்கு ஆளாகினர்.