மேலும் செய்திகள்
சிங்கபெருமாள் கோவிலில் விபத்தில் ஒருவர் பலி
18-Aug-2025
கோவை; கவுண்டம்பாளையம் செட்டியார் தோட்டத்தை சேர்ந்தவர் சபி லாரன்ஸ், 30. திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு அலங்காரம் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம், கோவை புலியகுளத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில், அலங்கார பணி மேற்கொண்டிருந்தார். வேலையை முடித்து விட்டு அதிகாலை, உடன் பணிபுரியும்ஜோஸ் என்பவருடன், வேனில் திரும்பிக் கொண்டிருந்தார். வேனை டிரைவர் மணி ஓட்டினார். அதிகாலை 4.30 மணிக்கு கணுவாய் ரோட்டில் நின்றிருந்த, டைல்ஸ் ஏற்றியிருந்த லாரியின் பின்பகுதியில் வேன் மோதியது. சபி லாரன்ஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த ஜோஸ், டிரைவர் மணி ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர். மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
18-Aug-2025