உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, கோவில்பாளையம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.கிணத்துக்கடவு அருகே, கோவில்பாளையத்தை சேர்ந்தவர் சக்கரையப்பன், 60, கூலி தொழிலாளி. இவர், கோவில்பாளையம் பள்ளிவாசல் அருகே லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சக்கரையப்பனிடம் விசாரணை செய்தனர். அவர் சட்ட விரோதமாக கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது உறுதியானது. அவரிடமிருந்து, 168 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி