உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

நெகமம்; நெகமம், செட்டிபுதூரை சேர்ந்தவர் மாகாளிசாமி, 72, கூலி தொழிலாளி. இவர், அதே பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதை தொடர்ந்து, மாகாளிசாமியிடம் விசாரித்த போது, செட்டிபுதூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது உறுதியானது. அவரிடம் இருந்து, 120 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்து, போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ