உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அன்புக்கரங்கள் திட்டம்: நெறிமுறைகள் வெளியீடு

அன்புக்கரங்கள் திட்டம்: நெறிமுறைகள் வெளியீடு

கோவை; தமிழக அரசின் அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் தகுதி பெற, புதிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பெற்றோரை இழந்து உறவினர்களின் அரவணைப்பில் வளரும் குழந்தைகளுக்கு, தமிழக அரசின் அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் 18 வயது வரை மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, ஏற்கனவே குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களில், தங்கிப் பயிலும் குழந்தைகள், மிஷன் வாத்சல்யா, கோவிட் -19 நிதி ஆதரவு, மற்றும் பி.எம்.கேர்ஸ் போன்ற, பிற அரசு திட்டங்களின் கீழ் நிதியுதவி பெறும் குழந்தைகள், அன்புக்கரங்கள் திட்டத்துக்கு தகுதி பெற மாட்டார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயனாளிகளை தேர்வு செய்ய, கள ஆய்வுக்குச் செல்லும் தன்னார்வலர்கள், விண்ணப்பித்த குழந்தைகளின் விவரங்களை முழுமையாகச் சரிபார்த்து, பிரத்யேக செயலியில் பதிவேற்ற வேண்டும்; கள ஆய்வை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை