மேலும் செய்திகள்
அரசு தொடக்கப்பள்ளியில் மகிழ் முற்றம் நிகழ்ச்சி
05-Jul-2026
கோவை: அரசுப் பள்ளி மாணவர்களிடையே தலைமைத்துவம், குழுப்பணி, சமூக மனப்பான்மை மற்றும் ஆளுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், 'மகிழ் முற்றம்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டிற்கு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, குழுத் தலைவர்கள், மாணவ அமைச்சர்கள் தேர்வு செய்ய, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதற்காக பள்ளி வளாகத்தில் தேர்தல் பிரசாரமும், 7ல் குழு தலைவர்கள், கல்வி, மாணவர் பாதுகாப்பு, தகவல் தொடர்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம் ஆகிய 5 அமைச்சகங்களுக்கு தேர்தல் நடந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ தலைவர்கள், அமைச்சர்கள் பதவியேற்கும் விழா அனைத்து அரசுப்பள்ளிகளிலும் நடந்தது. தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பதவியேற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
05-Jul-2026