உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம்

மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம்

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே மகா கணபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவை மாவட்டம் காரமடை அருகே சிக்காரம்பாளையம் பாலாஜி நகரில் மகா கணபதி கோவில் உள்ளது. நேற்று இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மங்கள இசையுடன் திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு 2ஆம் கால வேள்வி பூஜையும், 8.30 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடும் நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 9.30 மணிக்கு விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா கணபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சிக்காரம்பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் செய்திருந்தார். மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. செல்வராஜ், உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை