உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி ஆசிரியருக்கு மகா குரு விருது

பள்ளி ஆசிரியருக்கு மகா குரு விருது

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், தனியார் பள்ளி ஆசிரியருக்கு மகா குரு விருது வழங்கப்பட்டது. பொள்ளாச்சி அருகே, நெகமம் சின்னேரிபாளையம் ஸ்வஸ்திக் மெட்ரிக் பள்ளி ஆங்கில ஆசிரியர் மோகன்ராஜ். இவர், பள்ளி மாணவர்களுக்காக இணையதளம், மொபைல் செயலிகளை உருவாக்கி தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு வாயிலாக கற்பித்தல் பணியை மேற்கொண்டு வருகிறார். மேலும், ஆங்கில இலக்கணத்தை விளையாட்டு வழியில் கற்பித்து வருகிறார். இவரது கல்வி சேவையை பாராட்டி பொள்ளாச்சி லயன்ஸ் கிளப் மற்றும் அழகப்பா பல்கலை இணைந்து விருது வழங்கியுள்ளது. என்.ஜி.எம். கல்லுாரியில் நடந்த விழாவில், லயன்ஸ் கிளப் மாவட்ட கவர்னர் ராஜசேகர், தலைவர் நாகராஜ், கல்லுாரி முதல்வர் மாணிக்கச்செழியன், கல்லுாரி டீன் முத்துக்குமரன் ஆகியோர் விருது வழங்கினர். விருது பெற்ற ஆசிரியருக்கு சக ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி