உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாலையம்மன் கோவிலில் மகா கும்பாபிேஷகம்

மாலையம்மன் கோவிலில் மகா கும்பாபிேஷகம்

உடுமலை; உடுமலை எம்.பி., நகர் ஸ்ரீ மாலையம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம் நடந்தது.உடுமலை, தங்கம்மாள் ஓடை வீதி, எம்.பி., நகரில், ஸ்ரீ மாலையம்மன் மற்றும் வெற்றி விநாயகர், வேட்டை கருப்பராயர் கன்னிமார் கோவில்கள் உள்ளன.இங்கு எழுந்தருளி வரும் ஸ்ரீ மாலையம்மனுக்கு, புதிய ஆலயம் மற்றும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிேஷக விழா நடந்தது.கும்பாபிேஷக யாக சாலை பூஜைகள், கடந்த, 6ம் தேதி துவங்கியது. திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் மற்றும் காந்திசவுக் மாலையம்மன் கோவில்களிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, மாலை, 4:00 மணிக்கு, முதற்கால யாக சாலை பூஜைகள் துவங்கின.நேற்று காலை, இரண்டாம் கால யாக பூஜை, நிறைவேள்வி, கடம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, காலை, 8:50 மணிக்கு, வெற்றி விநாயகர், வேட்டை கருப்பராயர் கன்னிமார் உள்ளிட்ட பரிவாரமூர்த்திகள் மற்றும் ஸ்ரீ மாலையம்மனுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி